Monday, January 11, 2010

விருதகிரி

Tamil Flim


நடிகர் : விஜயகாந்த்

நடிகை : ..

இயக்குனர் :விஜயகாந்த்



நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் இயக்குனர் அவதார எடுக்கும் படம் விருதகிரி. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று சைதாப்பேட்டை ரேகா ஹவுஸில் தொடங்கியது. கலைராணி விஜயகாந்தை ஆரத்தி எடுப்பது போன்ற காட்சி முதலில் படமாக்கப்பட்டது. விருதகிரி படத்திற்கு எஸ்.கே.பாரதி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார்.


தீராத விளையாட்டு பிள்ளை

Tamil Flim


நடிகர் : விஷால்

நடிகை : தனுஸ்ரீ

இயக்குனர் :திரு



செல்லமே, சண்டக்கோழி, திமிரு, சத்யம், தோரணை படங்களுக்கு பின் விக்ரம்
கிருஷ்ணா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் தீராத
விளையாட்டு பிள்ளை.
விஷால் கதாநாயகனாக நடிக்க ஜோடிகளாக நீத்துசந்திரா, தனுஸ்ரீ தத்தா மற்றும்
ஒரு புதுமுகம் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ்,
மௌலி, சத்யன், சந்தானம் ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தன்னுடைய
வாழ்க்கையை தானே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கும் ஒருவனின்
வாழ்க்கையின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட 3 பெண்களை சந்திக்கிறான்.
அவர்களுடன் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ஜனரத்சகமாக, சுவையாக,
நகைச்சுவையுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், கொச்சின், கேரளா, மாலத்தீவு
பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்திற்காக 5 பாடல்கள் பதிவாகியுள்ளது.
சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி படத்திற்கு பின் விஷாலுடன் இணைந்து
யுவன்சங்கர் ராஜா பணியாற்றுகிறார்.


தம்பிக்கோட்டை

Tamil Flim


நடிகர் : நரேன்

நடிகை : பூனம் பஜ்வா

இயக்குனர் :அம்மு ரமேஷ்



ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குனராக இருந்த அம்மு ரமேஷ் இயக்கும் புதிய படம் தம்பிக்கோட்டை. இவர் தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்தவர் என்பதால் தனது முதல் படத்திற்கு தம்பிக்கோட்டை என பெயர் சூட்டியிருக்கிறாராம். படத்தின் நாயகனாக நரேனும், நாயகியாக பூனம் பஜ்வாவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரபு, மீனா, சங்கீதா, சந்தானம், கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் என படம் முழுக்க ஒரே நட்சத்திர கூட்டம். படத்தில் மீனா நரேனின் அக்காவாக நடிக்கிறார். வில்லி கேரக்டரில் சங்கீதா நடிக்கிறார். ஒரு பொண்ணை லவ் பண்ணா, அவளையே கட்டிக்குவாங்க. படத்தின் ஹீரோ, அந்த பொண்ணோட சேர்த்து எதை கட்டினாரு என்பது தம்பிக்கோட்டை படத்தின் கதையாம். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் தேவர் பிலிம்ஸ் பாலசுந்தரத்தின் மருமகன் ஆர் கே சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் காதல் மழை

Tamil Flim


நடிகர் : மகேந்திரன்

நடிகை : சுவாதிகா

இயக்குனர் :மதுவண்ணன்



நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் நாயகனாக நடிக்கும் முதல் படம் "முதல் காதல் மழை'. நடிகை சுவாதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ், நிழல்கள் ரவி, வனிதா, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் மதுவண்ணன். இவர் தாசரி நாராயணராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 80க்கும் மேற்பட்ட இந்தி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இளைஞர்களையும், யுவதிகளையும் கவரும் விதத்தில் காதலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் அளித்து படம் உருவாகிறது. பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. இசை - சாணக்யா. பாடல்கள் - வைரமுத்து, யுகபாரதி, டாக்டர் கிருதியா. ஒளிப்பதிவு -ஆகாஷ் அசோக்குமார். தயாரிப்பு - மாருதி குளோவர் ஆர்ட்ஸ்.


365 காதல் கடிதங்கள்

Tamil Flim


நடிகர் : யுவ கார்த்திக்

நடிகை : தூத்துக்குடி கார்த்திகா

இயக்குனர் :ப்ரியம் பாண்டியன்



விஷன் 21 கிரியேட்டிவ் டீம் ஒர்க்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் 365 காதல் கடிதங்கள். மாஜி கவர்ச்சி நாயகி மந்த்யாவை ப்ரியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ப்ரியம் பாண்டியன், சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் யுவ கார்த்திக்கும், அஜய்யும் கதாநாயகர்களாக அறிமுகமாக, நாயகியாக தூத்துக்குடி கார்த்திகா நடித்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் வரும் காதல் உண்மையான காதலா? இல்லை இனக்கவர்ச்சியா என்ற கருவை அடிப்படையாக கொண்டு, ஊட்டி, கோத்தகிரி ஆங்கிலப் பள்ளிகளில் 1000 மாணவ - மாணவியர் மத்தியில் அழகிய காதல் இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டுள்ளது. கவிஞர் யுரேகா எழுதிய பாடல்களுக்கு பால்.ஜே., இசையமைத்துள்ளார்.


அழுக்கன்

Tamil Flim


நடிகர் : ஒமேஷ் கேசார்

நடிகை : லீலா

இயக்குனர் :ஒமேஷ் கேசார்


சோலார் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் அழுக்கன். சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற தொழிலை செய்து வரும் இளைஞன், நல்லவனாக திருந்தி வாழ ஆசைப்படுகிறான். அவனை சமூகம் ஏற்றுக்கொண்டதா? என்பதே அழுக்கன் படத்தின் மொத்தக் கதையும். ஒமேஷ் கேசார் கதாநாயகனாக நடித்து, படத்தை தயாரித்து, இயக்கவும் செய்கிறார். முதல் படத்திலேயே தந்தை, மகன், முதியவராக 3 வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக மலேசியாவை சேர்ந்த லீலா, சஞ்ஜீதா அறிமுகம் ஆகிறார்கள்.

கே.சிருஷ்டி ஒளிப்பதிவு செய்ய, விஸ்வமாலிக் இசையமைக்கிறார். கபிலன், பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பு: சிங்கப்பூர் ரிச்சர்ட் மணியம். மலேசியா, சிங்கப்பூர், ஊட்டி மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.


தமிழ்ப்படம்

Tamil Flim


நடிகர் : மிர்ச்சி சிவா

நடிகை : தீஷா பாண்டே

இயக்குனர் :சி.எஸ்.அமுதன்


தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி இயக்கும் புதிய படம்தான் தமிழ் படம். படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பது போல் படமும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் சி.எஸ்.அமுதன். விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்துடன் சினிமா இயக்க வந்திருக்கிறார் இவர். நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். நாயகியாக மும்பையை சேர்ந்த தீஷா பாண்டே அறிமுகம் ஆகிறார்.

இந்த படம் இதுவரை ரசிகர்களை வேறு எந்தத் தமிழ்ப் படமும் சிரிக்க வைக்காத அளவிற்குச் சிரிக்க வைக்குமாம். படம் மட்டும் அல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றும் புதுமையாக இருக்குமாம். அதில் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் வித்தியாசமான சத்தங்களை வைத்து 'ஒமகஷியா...' என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பாடலை இலங்கையில் படம் பிடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற நடிகர்கள் இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக வலம் வருகிறார்கள். மேலும் டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், பரவை முனியம்மா, பெரியார்தாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

"தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு புதுமையான நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் 'தமிழ் படம்', தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொண்டாடும் விதத்தில் அமைந்திருக்கும்" என்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்த டி.சந்தானம் இப்படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.