Monday, January 11, 2010

தமிழ்ப்படம்

Tamil Flim


நடிகர் : மிர்ச்சி சிவா

நடிகை : தீஷா பாண்டே

இயக்குனர் :சி.எஸ்.அமுதன்


தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி இயக்கும் புதிய படம்தான் தமிழ் படம். படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பது போல் படமும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்கிறார் டைரக்டர் சி.எஸ்.அமுதன். விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்துடன் சினிமா இயக்க வந்திருக்கிறார் இவர். நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். நாயகியாக மும்பையை சேர்ந்த தீஷா பாண்டே அறிமுகம் ஆகிறார்.

இந்த படம் இதுவரை ரசிகர்களை வேறு எந்தத் தமிழ்ப் படமும் சிரிக்க வைக்காத அளவிற்குச் சிரிக்க வைக்குமாம். படம் மட்டும் அல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றும் புதுமையாக இருக்குமாம். அதில் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் வித்தியாசமான சத்தங்களை வைத்து 'ஒமகஷியா...' என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பாடலை இலங்கையில் படம் பிடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற நடிகர்கள் இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக வலம் வருகிறார்கள். மேலும் டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், பரவை முனியம்மா, பெரியார்தாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

"தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு புதுமையான நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் 'தமிழ் படம்', தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொண்டாடும் விதத்தில் அமைந்திருக்கும்" என்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்த டி.சந்தானம் இப்படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.


No comments:

Post a Comment